முதலீட்டாளர்களுக்கு ரூ.3லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் கிடைத்துள்ளது.
வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 116 புள்ளிகளாக இருந்தது. கடந்தாண்டு டிசம்பருக்கு பிறகு முதல் முறையாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 162 புள்ளிகள் உயர்ந்து, 24 ஆயிரத்து 328 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தது. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வின் எதிரொலியாகவே இந்திய சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. ஐடி நிறுவன பங்குகள் 4 விழுக்காடும், ஆட்டோமொபைல்துறை பங்குகள் 2 விழுக்காடும் ஏற்றம் கண்டன.பொதுத்துறை வங்கி பங்குகள் 1 விழுக்காடு லாபம் கண்டன.எச்சிஎல் டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா,டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. எச்டிஎப்சி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ்வங்கி, ஆகிய வங்கிகளின் பங்குகள் இழப்பை சந்தித்தன.. UPL, AstraZeneca Pharma, Bharti Hexacom, Laurus Labs உள்ளிட்ட 80 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத வகையில் ஏற்றம் கண்டன புதன் கிழமை ஒரு கிராம் தங்கம் 9ஆயிரத்து015 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 120 ரூபாயாக இருந்தது. ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் விலை குறைந்துள்ள. வெள்ளி விலையும் 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்…