ரயில்வே நிதிக்கழக பங்குகளின் லாபம் சரிவு..

இந்திய ரயில்வே நிதிக்கழகம் எனப்படும் ஐஆர்எப்சி நிறுவனத்தின் கடைசி காலாண்டு லாபம் 3 விழுக்காடு குறைந்து ஆயிரத்து 667 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2024 நிதியாண்டின் கடைசி காலாண்டில், இதே நிறுவனம் 1,717 கோடி ரூபாயை லாபமாக பதிவு செய்தது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 6,723 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த 2024-ல் 6,478 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த காலாண்டில் அந்த நிறுவனத்தின் மொத்த செலவினம் 5 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டில் நிதி ஆதாரத்தை 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐஆர்எப்சியின் இயக்குநர்கள் குழுவில், ரன்தீர் சஹாய் என்பவரை இயக்குநராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜீரோ கூப்பன் பத்திரங்கள் உள்ளிட்ட அம்சங்களை எதிர்நோக்கியிருப்பதாக சிஎம்டி மனோஜ் குமார் துதே தெரிவித்துள்ளார். ரயில்வே உள்கட்டமைப்பு, பொருட்களை சேமித்து வைக்கும் இடம், ஆகியவற்றை தேர்வு செய்வதில் முக்கிய இடமாக ஐஆர்எப்சி முக்கிய நிறுவனமாக உள்ளது.