தங்கம் வாங்க சரியான நேரம் இதுவா?

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு தகுந்தபடி கச்சா எண்ணெய் விலை மாறி வந்தது அந்தக்காலம், ஆனால் கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை பெரிய மாற்றம் காணாமல் நிலைபெற்றது. இந்த நிலையி்ல தங்கம் மட்டும் இதுவரை இல்லாத புதிய உச்சமெல்லாம்தொட்டு வந்தது. இந்தசூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 9 ரூபாய் சரிந்து 5437 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரத்து 488 ரூபாயாக இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுக்ள குறைந்து. ஒரு கிராம் 75 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 400 காசுகள் குறைந்து 75 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுப்பெறும் போது, தங்கத்தின் மீதான முதலீடுகள் கணிசமாக குறைவதே சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைய காரணமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க மதிப்பில் 1903 டாலர் என்ற அளவில் விற்பனை நடைபெற்றது. தங்கம் விலை கிராமுக்கு இங்கே குறிப்பிடும்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் ஆகியவற்றையும் சேர்க்கவேண்டும். இது கடைக்கு கடை மாறுபடும் என்பதால் தங்கம் விலை எங்கே குறைவு என்பதை ஆராய்ந்து தங்கம் வாங்குவது சிறந்தது.