இன்டஸ்இண்ட் நிறுவனத்துக்கு புதிய சிஇஓ இவரா..

சர்ச்சையில் சிக்கியுள்ள இன்டஸ்இண்ட் வங்கியின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆக்சிஸ் வங்கியின் துணை எம்டி ராஜிவ் ஆனந்த் தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 29 ஆம் தேதி இன்டஸ் இண்ட் வங்கியின் சிஇஓ பதவியை சுமந்த் கத்பாலியா ராஜினாமா செய்தார். பரஸ்பர நிதிபிரிவில் வேலை செய்த ராஜிவ், ஒரு பட்டய கணக்கராவார். இந்தாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதியுடன் ஆனந்த் விடைபெறுவார் என்று ஆக்சிஸ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இந்த நிலையில் ஆர்பிஎல் வங்கி, பந்தன் வங்கி எஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் இவர் தலைமை பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கத்தோலிக்க சிரியன் வங்கியின் தலைவர் பிரலாய் மோண்டல், கோடக் மஹிந்திராவங்கியின் ஷாந்தி ஏகாம்பரம், ஐசிஐசிஐயில் இருந்து அனும் பக்சி ஆகியோர் இன்டஸ்இண்ட் வங்கியில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சில்லறை பிரிவில் அனுபவம் அதிகம் கொண்ட ராஜிவ்தான் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இன்டஸ் இண்ட் வங்கியின் கணக்கீட்டு பிரச்சனையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் விடுபட்டு போன விவகாரத்தில் சிஇஓவும் விலகிய நிலையில், ஒரு குழுஅமைத்து அந்த குழு, தலைமை செயல் அதிகாரி பணிகளை செய்யய ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் கடிதம் ஒன்றும் சென்றுள்ளது. இந்த நிலையில் இன்டஸ்இண்ட் வங்கியில் என்னதான் பிரச்சனை என்று இருந்தாலும் புதிய நபருக்கு தலைமை செயல் அதிகாரி பதவி கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.