ஜே எஸ்டபிள்யூ பற்றி உச்சநீதிமன்றம் சொன்னது என்ன..

இந்தியாவின் முன்னணி ஸ்டீல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம்.திவாலான நிறுவனங்கள் அண்மையில் பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அதில் குறிப்பாக பூஷன் ஸ்டீலை டாடா குழுமமும்,.எஸ்ஸார் ஸ்டீலை அர்கெலார் மிட்டலும், அலோக் இன்டஸ்ட்ரீஸை ரிலையன்ஸும், வேதாந்தாவுக்கு எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனமும் கிடைத்தன. அதேபோல் மோனட் இஸ்பாட், பூஷன்பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துக்கும் சென்றது. மொத்தம் 12 நிறுவனங்கள் 3.45லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கைமாறின.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் பாலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விதி எண் 29 ஏ பிரிவில் சில குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட சில நிறுவனங்களில் அமலாக்கத்துறை விசாரணை மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் இருப்பதாகவும், முன்னாள் புரமோட்டர்கள் மோசடி செய்ததாகவும் புகார்கள் எழுந்தன. பூசன் ஸ்டீல் நிறுவனத்தை, ஏலத்தில் எடுக்க முதலில் 12 ஆயிரம் கோடி ரூபாய் பேசப்பட்ட நிலையில் திடீரென 19 ஆயிரத்து 350 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. நீதிபதிகளின் தீர்ப்பு திவால் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களையும், முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.