பங்குச்சந்தைகள் ஆட்டம் ஓய்ந்தது.

இந்திய பங்குச்சந்தைகள், 2024-25 நிதியாண்டின் இரண்டாவது நாளில் சரிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 110 புள்ளிகள் குறைந்து 73,903 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி8 புள்ளிகள் குறைந்து 22,453புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தையில் Tata Consumers Products, M&M, BPCL, Bajaj Auto, Adani Ports ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன. அதேபோல் Hero MotoCorp, HCL Technologies, Kotak Mahindra Bank, ICICI Bank ,SBI Life Insurance ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்தன.
ரியல் எஸ்டேட், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை , ஊடகம், ஆற்றல் மற்றும ஆட்டோமொபைல் துறை பங்குகள் 1 முதல் 2விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. தகவல் தொழில்நுட்பத்துறை, டெலிகாம், துறை பங்குகள் அரைவிழுக்காடு சரிந்தன
Aditya Birla Capital, Bharat Electronics, Colgate Palmolive, Hindustan Aeronautics, Cummins India, Ambuja Cements, Dixon Technologies, Adani Ports, Dynamatic Technologies, Cochin Shipyard, Glenmark Pharma, HEG, HG Infra Engineering, Indian Hotels, Jindal Steel, JSW Energy, Linde India, Mankind Pharma, Redington, SAIL, Time Technologies, Vedanta, Voltas,உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ளன. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 6430 ரூபாயாக உள்ளது.ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து440 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை,கிராமுக்கு 40காசுகள் உயர்ந்து 82ரூபாய் ஆக உள்ளது. கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ, 400ரூபாய் உயர்ந்து 82ஆயிரம் ரூபாயாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு தற்போது 3 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் ஆகியவையும் சேர்க்க வேண்டும், இவை இரண்டும் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.