ஹிரோ மோட்டாகார்ப் விதிமீறவில்லை: MCA

மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகமான எம்சிஏ ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் நடத்திய விசாரணை குறித்த தகவல் வெளியாகிள்ளது. அதில் அந்த நிறுவனம் எந்த முறைகேடுகளையும் செய்யவில்லை என்றும், அதே நேரம் நிதி முறைகேடுகளையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நிதி முறைகேடுகள் நடப்பதாக ஹீரோ நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து அதே ஆண்டு ஜூனில் புகார்கள் குறித்து விசாரணையை நடத்தத் தொடங்கியது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்தும் சோதனை நடத்தப்பட்டது. 2022 மார்ச் மாதம் முதல் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சோதித்தனர். கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், ஹிரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 12%ஆண்டுக்கு ஆண்டு நிகர லாபம் அடைந்திருப்பதாக கூறியுள்ளது. அதாவது ஆயிரத்து 203 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் வரையிலான காலாண்டில் பண்டிகை காலம் என்பதால் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. 100 சிசி ஸ்பிலன்டர், 125 சிசி எக்ஸ்ட்ரீம், சூப்பர் ஸ்பிளன்டர், உள்ளிட்ட பைக்குகளை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. வங்கதேசம் மற்றும் கொலம்பியாவிலும் ஹீரோ நிறுவனம் தனது புதிய பைக்குகளை விற்க விரிவாக்க திட்டத்தையும் செய்துள்ளது. 5.15கோடி ரூபாய் சோலார் பவர் வீலிங் திட்டத்துக்கும் அந்த நிறுவனம் முதலீட்டை அறிவித்துள்ளது. மத்திய கார்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணை நடத்தி அது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளதால் அந்த நிறுவன அதிகாரிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.