மருந்துகள் பற்றி சைடஸ் நிறுவன அதிபர் கூறுவது என்ன..

கமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மருந்து தயாரிக்கும் சைடஸ் நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பையும் தொடங்கியுள்ளது. இது பற்றி அந்நிறுவனத்தின் எம்.டி, ஷர்வில் படேல் கூறிய சில கருத்துகளை சுருக்கமாக உங்களுக்காக வழங்குகிறோம்.. வெறும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களாக இல்லாமல் அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் உயிர்காக்கும் நிறுவனமாக மாற்ற நினைப்பதாக ஷர்வில் குறிப்பிட்டுள்ளார். இதயம் சார்ந்த பிரிவு, நரம்பியல் மற்றும் எலும்பு சார்ந்த 3 பிரிவுகளில் கவனம் செலுத்த இருப்பதாக கூறிய அவர், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதயத்தில் செலுத்தப்படும் ஸ்டன்ட்களை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மருத்துவ உபகரணங்கள் பிரிவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இலக்கை எட்டுவதே தற்போதைய இலக்கு என்று கூறிய அவர், மலேரியா, ரேபீஸ் உள்ளிட்ட பிரிவுகளுக்கான மருந்தும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வியட்நாம், மியான்மர், பிரேசிலில் தங்களுடன் இணைந்து சில நிறுவனங்கள் உற்பத்தியை செய்யத் தொடங்கியிருப்பதாக கூறினார். புற்றுநோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சையான ஆன்காலஜி மற்றும் எதிர்ப்பு சக்தி சார்ந்த ஆய்வை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். காய்ச்சல் சார்ந்த மருந்துகள் அமோகமாக விற்பதாக கூறியுள்ள அவர், டைஃபாயிடு காய்ச்சலின் போது அளிக்கும் புதிய மருந்தை தயாரித்து வருவதாகவும், ஹெபடைட்டிஸ் இக்கான மருந்துகள் மற்றும் சிக்குன் குனியாவுக்கான மருந்துகளையும் தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.