டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த புதிய வசதி…

இந்தியாவில் ரொக்கப்பணத்தை விட டிஜிட்டல் பணத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தீவிரம் காட்டி வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 18,000 பணப்பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலம் அதாவது டிஜிட்டல் ரூபாய் வடிவிலேயே செய்யப்படுகின்றன.இதனை இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளைக்கு 10 லட்சமாக உயர்த்த மத்திய அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருகிறது. யுபிஐயுடன் டிஜிட்டல் ரூபாயை இணைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.வங்கிக்கணக்கு விவரங்கள் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள யுபிஐ வசதி உதவுகிறது. வங்கிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்வதில் கியூ ஆர் கோட்களை பயன்படுத்தவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிட்டல் ரூபாய் வசதி படிப்படியாக பெரிய வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் இல்லாமல் ஆஃப்லைனிலேயே எப்படி பணத்தை பரிமாறிக்கொள்வது என்ற நுட்பத்தை வடிவமைக்கும் முனைப்பில் ரிசர்வ் வங்கி மற்றும் சிபிடிசி அதிகாரிகள் இணைந்துள்ளனர். பட்டன்களில் இயங்கும் போன்களில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கான பணிகளை HDFC உருவாக்கி வைத்துள்ளது. எனினும் எந்த அதிகாரபூர்வ நுட்பத்தையும் ரிசர்வ் வங்கி இதுவரை இறுதி செய்யவில்லை. பட்டன் வைத்த போன்களில் புதிய டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனை நடந்தால் வருங்காலங்களில் இந்த ரூபாய் பரிவர்த்தனை வேகமெடுக்கும் என்றும் சிபிடிசி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.