4%விழுந்த ஓலா நிறுவன பங்குகள்..

அதிரடி சோதனை, வாகன பறிமுதல், ஷோரூம்களை மூடிவருதல் உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளில் 4% வரை திங்கட்கிழமை சரிந்தன. இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை ஓலா நிறுவனம் மதிக்க வேண்டும் என்று ஓலா நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதத்தையும் அனுப்பியிருந்தது. மோட்டார் வாகன சட்டத்தின் வணிக சான்றிதழ்களுடன்தான் இந்தியாவில் பைக்குகளை விற்க முடியும் இந்த நிலையில் நாடு முழுக்க 3ஆயிரத்து 400 ஷோரூம்களை ஓலா நிறுவனம் கொண்டுள்ளது. இதில் 100 பகுதிகளில் உள்ள ஓலா ஷோரூம்களுக்கு பதிவு செய்யாத வாகனங்களை விற்கவும், டெஸ்ட் டிரைவ் செல்லவும் 95 % ஓலாவிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பிரச்சனைகளால் ஓலா நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை 4 %வரை குறைந்து, ஒருபங்கு 54.11 ரூபாயாக விற்கப்பட்டது. ஏற்கனவே ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சுற்று சர்ச்சையில் அந்நிறுவனம் சிக்கியுள்ளது. இந்தாண்டில் மட்டும் அந்நிறுவனத்தின் பங்குகள் 36% -ம், கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் 60% சரிவை கண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஓலா நிறுவனம் 25,000 மின்சார பைக்குகளை விற்றுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 50ஆயிரம் பைக்குகளையாவது விற்க ஓலா நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது குறிப்பிடத்தக்கது.