பயணிகள் வாகனங்கள் விற்பனை உயர்வு..

இந்தியாவில் பயணிகள் வாகனங்கல் விற்பனை கடந்த ஏப்ரலில் 4.4 விழுக்காடு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. எஸ்யுவி வகை வாகனங்கள் அதிகம் விற்கப்படுகின்றன. கிராமபுறங்களிலும் மக்கள் கார் வாங்க ஆர்வம் காட்டி வருவதும் இந்த விற்பனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகி கார்கள் அதிகம் விற்கப்படுகின்றன. இதற்கு அடுத்த இடங்களில் ஹியூண்டாய், டாடாமோட்டார்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனங்கள் இருந்தன. இந்த சூழலில் ஏப்ரல் மாத விற்பனை தரவுகளின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 52ஆயிரத்து 330 வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் விற்றுள்ளது. இது 27.6விழுக்காடு அதிகமாகும். மஹிந்திரா நிறுவன வாகனங்களுக்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டும் அதே நேரம், ஹியூண்டாயின் பயணிகள் வாகனத்தின் விற்பனை 11.6விழுக்காடு குறைந்துள்ளது. டாடா நிறுவனத்தின் கார் விற்பனையும் 5.6விழுக்காடு குறைந்துள்ளது. டலேகான் பகுதியில் புதிய ஆலையும் ஹியூண்டாய் நிறுவனம் தொடங்க இருக்கிறது. மாருதி சுசுகியின் கார்கள் ஏப்ரலில் மட்டும் 1.38லட்சம் கார்களை விற்றுத்தள்ளியுள்ளது. ஏப்ரலில், டொயோடா, கியாஆகிய நிறுவனங்களின் கார்கள் அதிகம் விற்றுள்ளன.சோனட் ரக கார்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று நிலையில் சைரோஸும் ஆவலை தூண்டியுள்ளது.