540 கோடி ரூபாய் நஷ்டமடைந்த பேடிஎம்..

இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள், தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், பேடிஎம் நிறுவனம் தனது 4 ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் கடந்த காலாண்டில் மட்டும் அந்த நிறுவனத்துக்கு 539.8கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதற்கு முன்பு இதே நிறுவனத்துக்கு அதாவது கடந்த 2024 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 549.6 கோடி ரூபாய் கடன் இருந்தது. கடந்த நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் நஷ்டம் வெறும் 208 கோடி ரூபாயாக இருந்தது. நொய்டாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் மொத்த நிதியாண்டின் நஷ்டம் 658.7 கோடி ரூபாயாக இருக்கிறது. இது 2024 நிதியாண்டில் 1,417 கோடி ரூபாயாக இருந்தது. மாதாமாதம் பணப்பரிமாற்றம் செய்யும் அளவில் பேடிஎம் வாடிக்கையாளர்கள் விகிதம் 25% குறைந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள் என்று அந்நிறுவனத்தின் அதிகாரியான விஜய் ஷேகர் சர்மா கூறியுள்ளார்.
பேடிஎமின் தாய் நிறுவனமான ஓசிஎல் நிறுவனத்தின் இயக்க வருவாயும் 1911 கோடியாக சரிந்துள்ளது. இது 15.7% சரிவாகும். இந்தியாவின் யுபிஐ நிறுவனத்திடம் இருந்து பேடிஎம் நிறுவனத்துக்கு ஊக்கத்தொகையாக 70 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. கடைகளில் கிடைக்கும் வருவாய் அந்நிறுவனத்துக்கு அதிகரித்துள்ளது. நிதி சேவைகள் பிரிவில் 79 விழுக்காடு உயர்ந்து 545 கோடி ரூபாயாக வருவாய் உயர்ந்துள்ளது. தனிநபர் மற்றும் வியாபாரிகளுக்கான கடனாக 5738 கோடி ரூபாயை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. 12,809 கோடி ரூபாய் கேஷ் பேலன்ஸ் இருக்கிறது. இதற்கு முன்பு இந்த தொகை 8650 கோடி ரூபாயாக இருந்தது.