2025 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி தங்கவேட்டை..

இந்திய ரிசர்வ் வங்கி, 2024-2025 நிதியாண்டில் மட்டும் 58 டன் தங்கத்தை கூடுதலாக வாங்கிக்குவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிடம் தற்போது 879 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதில் 26 டன் தங்கம் கடந்த நிதியாண்டின் இரண்டாவது பாதியில்வாங்கப்பட்டது. கடந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவிடம் இருந்த பணத்தின் கையிருப்பு 9.32 விழுக்காடில் இருந்து கடந்த மார்ச் மாதத்தில் 11.70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு அளவு என்பது 688 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. இதில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 26 டன் தங்கம் இந்தியாவிற்குள் வந்துள்ளது. இந்தியாவிடம் தற்போது தங்கம் கையிருப்பு இருந்தாலும், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு வங்கியில் இந்தியா 348.62 டன் தங்கத்தை வைத்துள்ளது. சர்வதேச வங்கிகளில் இந்தியாவின் 18.98 டன் தங்கம் வைக்கப்பட்டுள்ளது. 511 டன் தங்கம் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளது. 18.98 டன் அளவுக்கு டெபாசிட்டாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 மார்ச்சில் இந்தியா சேமித்த தங்கத்தின் அளவு 38விழுக்காடாக இருந்த நிலையில் கடந்தாண்டு செப்டம்பரில் இந்த அளவு 59 விழுக்காடாக உயர்ந்துள்ளது.