செபியின் புதிய அதிரடி..

செபியின் புதிய தலைவராக பதவியேற்றிருக்கும் துஹின் காந்த பாண்டே ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், நிதி அமைச்சகம் மற்றும் நிதி சீரமைக்கும் அமைப்புகளும் சேர்ந்து ஒருங்கிணைந்த கேஒய்சியை அறிமுகப்படுத்த பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சென்ட்ரல் கேஒய்சி என்பது ஆன்லைனில் இருக்கும் ஒரு தரவாகும். இதனை அனைத்து நிதி நிறுவனங்களும் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தசென்ட்ரல் கே.ஒய்சி குறித்து நிதித்துறை செயலாளர் ஒரு குழு அமைத்துள்ளதாக கூறிய துஹின், இதற்கான காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்றார். எவ்வளவு விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக இந்த கே.ஒய்.சி திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கே.ஒய்.சியில் ஒரு இடத்தில் உங்கள் ஆவணங்களை பதிவு செய்தால் ஆறு முகமைகள் அதனை பகிர்ந்துகொள்ள இயலும். மத்திய கே.ஒய்.சிக்கான பணிகள் நடக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். நிதி சேவைத்துறை செயலாளர் நாகராஜு தலைமையில் இது தொடர்பாக ஒரு கூட்டமும் நடத்தப்பட்டது. வர்த்தகம் செய்யும் அதே நாளில் பணத்தை பெறும் டி பிளஸ் 0 திட்டம் வருப்பமாகவே இருப்பதாக கூறியுள்ள அவர், அது கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார். ஐபிஓ சார்ந்த ஆவணங்களில் தற்போதே ஏ.ஐ பயன்படுத்தப்படுவதாகவும், இது படிப்படியாக மற்ற அம்சங்களுக்கும் பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி முதலீட்டாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்கின் மூலம் இதனை செய்ய முடிந்ததாகவும் துஹின் கூறியுள்ளார்.