அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்..

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த வாரம் டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மட்டும் தங்கள் சந்தை மதிப்பை 2லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் உயர்த்திக்கொண்டுள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரிய லாபத்தை சந்தித்தன. டிசிஎஸ், பஜாஜ் ஃபினான்ஸ், இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் 1லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து 19.24லட்சம் கோடி ரூபாயாக சந்தை மூலதனம் அதிகரித்துள்ளது. இதேபோல் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனம்20 ஆயிரத்து 755 கோடி ரூபாய் உயர்ந்து 10.56லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ நிறுவனத்தின் சந்தை மூலதனம் 19,381 கோடி ரூபாய் மதிப்பு உயர்ந்து 10.20லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. எச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதன மதிப்பு 11,514 கோடி ரூபாய் உயர்ந்து 14.73லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் இன்போசிஸ் நிறுவன பங்குகளின் மதிப்பு 10ஆயிரத்து 902 கோடி ரூபாய் உயர்ந்து 6.25லட்சம் கோடி ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. ஐடிசியின் சந்தை மூலதன மதிப்பு 2ஆயிரத்து 502 கோடி ரூபாய் உயர்ந்து 5.38லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகளோ 1,160.2 கோடி ரூபாய் உயர்ந்து 7.14லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. லாபத்தை பதிவு செய்த அதே நேரத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 15,470 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவருக்கு 1,985 கோடி ரூபாயும், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 1,284கோடி ரூபாயும் சரிந்தன.