பங்குச்சந்தைகளில் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகள், திங்கட்க்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384 புள்ளிகள் சரிந்து, 81,748 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி100 புள்ளிகள் சரிந்து 24ஆயிரத்து 668 புள்ளிகளில் வணிகம் நிறைவுற்றது. Dr Reddy’s Labs, IndusInd Bank, Bajaj Finance, Power Grid, HDFC Life உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. Titan Company, TCS, Hindalco Industries, Adani Ports, BPCLஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 3 விழுக்காடும், ஊடகத்துறை ஒன்றரை விழுக்காடு உயர்வும் பெற்றன. பொதுத்துறை வங்கிகள் அரை விழுக்காடு வரை உயர்ந்தன தகவல் தொழில்நுட்பம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள்
அரை முதல் ஒரு விழுக்காடு சரிந்தன. அதேநேரம் , Oberoi Realty, Kaynes Technologies, Dixon Technologies, 360 One wam, Affle India, Lloyds Metals, Paytm, Indian Hotels, Info Edge, HBL Power, KPR Mills, Page Industries, Ramco Cements, LTIMindtree, Persistent Systems, BLS Internation, CRISIL, Coforge, Swan Energy, HCL Technologies,உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டன. திங்கட்க்கிழமை ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி 7140 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.