முதலீட்டாளர்களுக்கு ரூ.10லட்சம் கோடி லாபம்..

இந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் தொடர் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 578 புள்ளிகள் உயர்ந்து 76ஆயிரத்து 735 புள்ளிகளில் வணிகம் முடிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 500 புள்ளிகள் உயர்ந்து 23ஆயிரத்து329 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. IndusInd Bank, Shriram Finance, L&T, Tata Motors, Adani Enterprises உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை உயர்ந்து முடிந்தன. இந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் ஐடிசி நிறுவன பங்குகள் மதிப்பு சரிந்து முடிந்தன . செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 70 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 35 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 720 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 69 ஆயிரத்து760 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 2 ரூபாய் விலை உயர்ந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோ ஒருலட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும்.