வளர்ச்சியை நோக்கி தனிஷ்க்

டாடா குழுமத்தில் இருந்து விற்கப்படும் தங்க நகைகள் தனிஷ்க் நகைக்கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக 18 கேரட் தங்கத்தின் செய்கூலி, சேதாரம் குறைக்க முடிவெடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 10 கிராம் தங்கம் 1லட்சம் ரூபாயை கடந்த நிலையில், மக்கள் விரைவில் 18 கேரட் தங்கத்தை வாங்குவார்கள் என்றும் அதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் தனிஷ்க் நகைக் கடைகளில் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜோய்சாவ்லா கூறியுள்ளார். தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் 2025-26 காலகட்டத்தில் விற்பனை 9 முதல் 11 விழுக்காடு வரை சரியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தங்க நகையாக இல்லாமல் தங்க நாணயங்களுக்கு தனிஷ்க்கில் வெறும் 5 விழுக்காடு மட்டுமே செய்கூலியாக வசூலிக்கப்படுகிறது. இரட்டை இலக்க வளர்ச்சியை தங்கள் நிறுவனம் எட்டும் என்று கூறும் அதிகாரிகள், கடந்த காலாண்டில் 24விழுக்காடு வளர்ந்துள்ளதாகவும், காயின்களை வாங்குவோரின் விகிதம் 65 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மியா என்ற பெயரில் 9 கேரட் நகைகள் மற்றும் 14 கேரட் ஸ்டட்டட் நகைகளும் விற்கப்படுகின்றன. அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், டைட்டன் நகைக்கடை பிரிவின் வளர்ச்சி மட்டும் 26விழுக்காடு உயர்ந்து 14,697 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலகட்டத்தில் இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வணிகம் 25விழுக்காடு வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.