அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்க்கும் டாடா மோட்டார்ஸ்..

கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான மென்பொருட்களை வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு எஸ்டிவி தளம் அமைக்கும் நிறுவனங்கள் என்று பெயர். இந்த வகை நிறுவனங்கள் இந்தியாவைவிட அமெரிக்காவில் அதிகம் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் எக்சல்போர் நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் கைகோர்த்துள்ளது. இதே நிறுவனம் ஏற்கனவே ஹீரோ நிறுவனத்துக்கும் பணிகளை செய்து தருகிறது. மின்சார வாடகை கார்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கான மென்பொருட்களை தயாரிக்க அமெரிக்க நிறுவனத்துடன் டாடா நிறுவனம் கைகோர்த்துள்ளது. எக்சல்ஃபோர் நிறுவனத்துக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் குறைவாக உள்ள நிலையில் டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதால் அந்த நிறுவனத்துக்கு மவுசு கூடியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு உலகளாவிய வருவாய் ஈட்ட அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூருவில் பிரத்யேக பொறியாளர் குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது. வெறும் மென்பொருள் மட்டுமின்றி, கிளவுடு சேவைகளையும் அந்த நிறுவனம் அளிக்க இருக்கிறது. பிரேக்கிங், சாசிஸ், பவர்டிரெயின், ஏர்கன்டிஷனிங் உள்ளிட்ட அனைத்தையும் இணைக்கும் வகையிலான மென்பொருள் தயாராக இருக்கிறது. ஆவ்டி, பிஎம்டபிள்யூ, ஃபோக்ஸ்வாகன், ஹோண்டா, வின்ஃபாஸ்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எக்சல்ஃபோர் நிறுவனம் மென்பொருள்களை வழங்கி வருகிறது. சீனாவில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே அளவிலான தேவை தற்போது இந்தியாவிலும் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீநாத் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.