ஹியூண்டாயை ஓவர்டேக் செய்த டாடா..

ஏப்ரல் மாதத்தில் மட்டும் சந்தையில் கார் விற்பனை கணிசமாக சரிந்தது. எனினும் விற்பனை அளவில் ஹியூண்டாயை விட டாடா எண்ணிக்கையில் அதிகரித்துள்து. ஹியூண்டாய் நிறுவனம் ஏப்ரலில் மட்டும் 44,374 கார்களை டீலர்களுக்கு அனுப்பி வைத்தது. இது கடந்தாண்டு ஏப்ரலை விட 11.6 விழுக்காடு குறைவாகும். அதாவது கடந்தாண்டு ஏப்ரலில் ஹியூண்டாய் நிறுவனம் 50 ஆயிரத்து 201 கார்களை ஷோரூம்களுக்கு அனுப்பி வைத்தது. இதேபோல் ஏப்ரல் மாதத்தில் டாடாவின் உள்நாட்டு விற்பனை 6 விழுக்காடு குறைந்து 45,199 கார்களாக விற்பனை செய்யப்பட்டது. இது கடந்தாண்டு ஏப்ரலில் விற்கப்பட்ட 47,883 கார்களைவிட குறைவாகும். இந்தியாவில் கார்கள் விற்பனை மந்தமாகும் நிலையில், ஹியூண்டாய் மட்டும் இந்தியாவில் தயாரிக்கும் கார்களுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளதை புரிந்துகொண்டு ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு 21.5 விழுக்காடு வளர்ச்சியை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. இதனிடையே கியா நிறுவன கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சைரோஸ் கார்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறது. ஏப்ரலில் மட்டும் இந்த கார்கள் 23,623 கார்கள் விற்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு ஏப்ரலில் இந்த நிறுவனம் 19,968 கார்களை விற்றுள்ளது. கியா இந்தியா நிறுவனம், வரும் 8 ஆம் தேதி கிளாவிஸ் என்ற புதிய காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த டொயோடா நிறுவனம், இந்தியாவில் ஏப்ரலில் மட்டும் 21 விழுக்காடு காரை விற்றுள்ளது. உள்நாட்டில் இந்தியாவில் மட்டும் 24,833 கார்களை விற்றுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 20ஆயிரத்து 494 கார்கள் விற்கப்பட்டுள்ளன. ஜேஎஸ்டபிள்யூ எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் 23 விழுக்காடு வளர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஏப்ரலில் மட்டும் 5,829 கார்களை விற்றுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் இதே நிறுவனம் 4,725 கார்களை விற்றுள்ளது.