இந்தியாவின் தங்கவேட்டை..

உலகளவில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கும் அளவு கடந்த அக்டோபரில் 60 டன்னாக இருந்தது. இதில் ரிசர்வ் வங்கி மட்டும் 27 டன்களை வாங்கி குவித்து வைத்துள்ளதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் இந்தியா 77 டன் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது. இதனை சர்வதேச நாணைய நிதியத்தின் மாதாந்திர தரவுகளும் உறுதி செய்துள்ளன. கடந்த 2023-ஐ விட இந்த அளவு என்பது 5 மடங்கு அதிகமாகும் என்கிறது உலக தங்க கவுன்சில். இந்தாண்டு வாங்கப்பட்ட தங்கத்துடன் சேர்த்து 882 டன் தங்கம் இந்தியாவிடம் உள்ளது. இதில் 510 டன் தங்கம் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் துருக்கி 72 டன்னும், போலந்து 69 டன் தங்கமும் வாங்கியுள்ளன. உலகளவில் வாங்கப்பட்ட தங்கக் கட்டிகளில் இந்த மூன்று நாடுகளின் பங்கு மட்டும் 60 விழுக்காடாகும். அக்டோபர் மாதத்தில் மட்டும் துருக்கி 17 டன் தங்கம் வாங்கியுள்து. இதே காலகட்டத்தில் போலந்து வெறும் 8 டன் தங்கம்தான் வங்கியுள்ளது. இந்த சூழலில் கஜகஸ்தான் தேசிய வங்கி5 டன் வாங்கியுள்ளது. செக் நாட்டு தேசிய வங்கி,அக்டோபரில் 2 டன் தங்கத்தை மட்டுமே வாங்கியுள்ளது. எனினும் தொடர்ந்து 20 மாதங்களாக அந்நாடு தங்கம் வாங்கி வருகிறது. கிர்கிஸ்தான் 2 டன் வாங்கியுள்ளது. கானா 1டன் வாங்கியுள்ள நிலையில் கானாவின் மொத்த தங்க கையிருப்பு 28 டன்களாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் முதல் கானா நாடு தொடர்ந்து தங்கம் வாங்கி வருகிறது. கடந்தாண்டு மே மாதத்துக்கு முன்பு, கானா நாட்டு தங்க கையிருப்பு 9 டன்னாக இருந்தது.