ரிசர்வ் வங்கி வரை பேசவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு

இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களின் விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை என்று டிசம்பர் 6 ஆம் தேதி அறிவித்தது. 2024-25 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 5.4விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2022-23 3 ஆவது காலாண்டைவிடவும் குறைவாகும். 8.1 விழுக்காடு வளர்ச்சியை கடந்தாண்டு இந்தியா எட்டியிருந்த போதிலும் கடந்த காலாண்டில் வளர்ச்சி 6.7 விழுக்காடாக குறைந்துள்ளது. இந்த பிரச்சனைகள் குறித்து இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் பெரிதாக விவாதிக்கவில்லை. ஆனால் தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை பற்றி பேசப்பட்டது. இதை விவாதிக்க காரணம் உள்ளது. கடந்த அக்டோபரில் இந்தியாவின் பணவீக்கம் 6.21 விழுக்காடாக இருந்தது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகபட்சமாகும். வீட்டிலேயே சமைத்த சைவ மற்றும் அசைவ உணவுகளின் விலை முறையே 7.2விழுக்காடும், 1.8 விழுக்காடும் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணமாக தக்காளி கூறப்படுகிறது. உணவில் தக்காளி விலை உயர்வும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப், உத்தரபிரதேசம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் வாங்கப்படுகின்றன. அங்கும் உற்பத்தி தற்போது பாதியாக குறைந்துள்ளது. வீட்டில் சமைக்கப்படும் உணவுகளின் விலை 10 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தியில் இந்தியா சிறந்ந்து விளங்கி வருகிறது. தக்காளி மற்றும்உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வெங்காய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளை சேமித்து வைக்க கிடங்குகள் தேவை என்பது குறித்து ரிசர்வ் வங்கி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விரைவில் உணவுப்பொருட்கள் விலைவாசி கணிசமாக குறையும் என்றும் சக்திகாந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.