கேட்பாரற்று கிடக்கும் 90 ஆயிரம் கோடி ரூபாய் ..

இந்தியாவில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து உரிமை கோராமல் 90 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருப்பதாக IEPFA என்ற அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிறுவன விவகாரங்கள் தொடர்பான அமைச்சகம், கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை குறித்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. உரிய அடையாளங்களை வைத்து உரிமை கோராதவர் பணத்தை தனியாக எடுத்து வைப்பது இதன் நோக்கமாகும். இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, ரேமன்ட்ஸ் நிறுவனத்தின் 288 பங்குகளை வாங்கி, அதற்கான டிவிடன்ட்டாக 4 ஆயிரத்து 32 ரூபாயை இன்னும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார். உரிமை கோராமல் இருக்கும் பணத்தின் விவரங்களை முதலீட்டாளர்கள் iepfa.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள இயலும். பான்கார்டு மூலமாகவும், நிறுவனத்தின் பெயர் அல்லது டீமாட் கணக்குகள் மூலமாகவும் உரிமை கோரப்படாத தொகை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள இயலும். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தா இன்னும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள எச்டிஎப்சி வங்கியின் பங்குகள் மற்றும் அதற்கான டிவிடன்ட் 2 லட்சம் ரூபாயை உரிமை கோராமல் உள்ளார். விஜய் கேடியா, ராதாகிருஷ்ணன் தமானி உள்ளிட்ட பிரபலங்களும் தங்கள் தொகைக்கு உரமை கோராமல் உள்ளது. குளிர்கால கூட்டத் தொடருக்கு பிறகான தகவல்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் IEPFA நிறுவனம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக டிஜிட்டல் தளம் கடந்த பிப்ரவரியிலேயே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அது தாமதமாகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், IEPFA நிறுவனத்துடன் முகமைகள் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.