சப்ளையர் நிறுவனத்தை வாங்கிய டொயோடா..

ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக உள்ள கார் நிறுவனம் டொயோடா. இந்த நிறுவனத்துக்கு டொயோடா இன்டஸ்ட்ரீஸ் கார்ப் என்ற நிறுவனம் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில் டொயோடா இன்டஸ்ட்ரீஸ் கார்ப் நிறுவனத்தின் பங்குகளை 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு டொயோடா மோட்டர் கார்ப் நிறுவனம் வங்கியுள்ளது. டொயோடா மோட்டார் கார்ப் நிறுவனத்தின் தலைவராக அகியோ டொயோடா இருந்தாலும் அவரிடம் வெறும் 1 விழுக்காடு பங்குகள் மட்டுமே உள்ளன. செவன் அன்ட் ஐ என்ற நிறுவனத்தையும் டொயோடா வாங்க முற்பட்டது ஆனால் அது தோல்வியில் முடிந்து. நிறுவன விரிவாக்கத்துக்கு அகியோவிடம் இருந்தும், மிட்சுபிஷி யூ எப்ஜே ஃபைனான்சியல் குரூப் என்ற அமைப்பும் நிதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக குடும்ப வியாபாரத்தை கவனித்து வந்த அகியோ, கடந்த 2023-ல் டொயோடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார்.
நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு அகியோ மீண்டும் பதவியேற்க வேண்டும் என்று பங்குதாரர்களில் கால்பங்கு ஓட்டுகள் விழுந்துள்ளன. 1937 ஆம் ஆண்டு டொயோடா மோட்டார் நிறுவனம் உருவானது. டொயோடா இன்டஸ்ட்ரீஸ் கார்ப் மற்றும் டொயோடா மோட்டர் நிறுவனத்துக்கும் இடையே வலுவான பிணைப்பு இருந்து வருகிறது. டொயோடா இன்டஸ்ட்ரீஸில் 38 விழுக்காடு பங்குகள் வேறொரு நபரிடம் இருக்கின்றன. டொயோடா ஃபுடுசான் கம்பெனி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் அகியோவுக்கு 5 விழுக்காடு பங்குகள் உள்ளன.