சீனா மீதான வரியை குறைக்க முடியாது:டிரம்ப்..

அதிபரானது முதல் பல்வேறு அதிரடிகளை செய்து வரும் டிரம்ப், சீனா மீது விதிக்கப்பட்ட 145 %வரியை குறைக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த டிரம்ப், சீனாவுக்கு மட்டும் அதிக தொகை வரியாக விதித்தது. சில நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், சீனாவிடம் பேச்சுவார்த்தை இல்லை என்று டிரம்ப் மறுத்துவிட்டார். சீனநிதித்துறை செயலாளரும், அமெரிக்க செயலாளரும் பேசி வர்த்தகம் குறித்து முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்த்தகப்போரை நீட்டிக்கும் வகையில், டிரம்ப்பின் அறிவிப்பு சீனாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராக இருப்பதாக அமெரிக்கா சொன்ன நிலையில், முதலில் அந்த தகவல்களை அமெரிக்கா சரிபார்க்க வேண்டும் என்றும் சீனா மறுத்துள்ளது. வர்த்தக பேச்சுவார்த்தையில் ஒருவேளை நல்ல முடிவு எட்டப்பட்டால் சீனப் பொருட்களின் வரி குறைய வாய்ப்பிருப்பதாக கூறிய டிரம்ப், கடந்த 2 ஆம் தேதி பேசிய சீன வணிகத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர், டிரம்ப் தன்னிச்சையாக உயர்த்திக்கொண்டே செல்லும் வரியை ரத்துசெய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகுஅமெரிக்கா-சீனா இடையேயான உறவுகளில் பெரிய பிளவு ஏற்பட்டது.