20,000 பேரை வேலையை விட்டு நீக்கிய UPS..

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கி வரும் யூபிஎஸ் என்ற கொரியர் நிறுவனம், தனது ஊழியர்களில் 20 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களில் முக்கியமான சில நிறுவனங்கள் தங்களுக்கு ஆர்டர்களை அளிக்காததால் பணி நீக்கம் செய்வதாக யுபிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பணிநீக்க அறிவிப்பை அடுத்து வரும் ஜூன் மாதம் முதல் 73 தனது கிளை மற்றும் சொந்த கட்டடங்களை யுபிஎஸ் நிறுவனம் மூடுகிறது. அமேசான் நிறுவனத்தின் பார்சல்களில் குறைந்த வருவாய் உள்ள பார்சல்களை கையாளப்போவதில்லை என்று கடந்த ஜனவரியில் யூபிஎஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. நெட்வொர்க் கட்டமைப்பை சீரமைக்கும் நடவடிக்கையாக 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேமிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகான காலகட்டத்திலற்கு பிறகு இ-காமர்ஸ் வளர்ந்ததும், இந்த நிறுவனம் பெரிய லாபத்தை சந்தித்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் புதுப்புது பரஸ்பர வரிகளை விதித்து வருவதால் நிலைமை சிக்கலாகிறது. UPS நிறுவன பங்குகள் 23%வரை திங்கட்கிழமை சரிந்தது. டிரம்ப்பின் வணிக பாலிசிகளில் மாற்றம், முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. யூபிஎஸ் மற்றும் ஃபெட் எக்ஸ் நிருவனங்கள் வணிகத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், யூபிஎஸ் நிறுவனம் தனது ஆட்களை குறைப்பதால் சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. கடந்தவாரம்தான் கனடாவைச் சேர்ந்த அன்டலுவார் ஹெல்த்கேர் நிறுவனத்தை 1.6பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு யூபிஎஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.