ஐடிஎப்சி பங்குகளை வாங்க முயலும் வார்பர்க் நிறுவனம்..

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 10 விழுக்காடு பங்குகளை வாங்க தனியார் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ்இந்திய போட்டி ஆணையத்தை அனுகியுள்ளது. அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், 81 கோடி பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதேபோல் பிளாட்டினம் இன்விக்டஸ் நிறுவனமும் 43.72 கோடி பங்குகளை வாங்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது. பிளாட்டினம் இன்விக்டஸ் நிறுவனம் என்பது அபுதாபி முதலீட்டு அமைப்பான அடியாவின் கிளை நிறுவனமாகும். அபுதாபி அரசாங்கத்தின் நிறுவனமே முதலீடு செய்ய துடிக்கும் நிலையில், இந்திய போட்டி ஆணையம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது குறித்த அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சில்லறை கடன்கள், வீட்டுக்கடன், கல்விக்கடன், நுண்கடன்கள் இந்தியாவில் பிரபலமாக உள்ளன. இதேபோல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட துறைகளும் வேகமாக இந்தியாவில் வளர்கின்றன. கடந்த மாதம் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி, 4 ஆயிரத்து 876 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை கரன்ட் சீ இன்வெஸ்ட்மென் நிறுவனத்துக்கும், 2,624 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பிளாட்டினம் இன்விக்டஸ் நிறுவனத்துக்கும் அளிக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்ததும் இந்த பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.