கனடாவில் தயாராகும் கார்கள் வேண்டாம் என்கிறார் டிரம்ப்..

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கனடா மீதான ஆட்டோமொபைல் வரி விதிப்பு வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார். கனடாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், அமெரிக்க அதிபரின் பேச்சு கனடாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தங்கள் நாட்டு கார்களை தான் உற்பத்தி செய்ய இருப்பதாகவும், கனடாவிடம் இருந்து கார்கள் வேண்டாம் மரியாதை மட்டுமே வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கனடாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது கனடா நாட்டு தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. கனடாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையான்மை, தேசிய அடையாளத்தை சீண்டிப்பார்க்கும் வகையில் டிரம்பின் பேச்சு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே 40 ஆண்டுகள் வணிக உறவுகள் இருந்து வரும் நிலையில், டிரம்பின் வர்த்தகப்போர் இருதரப்பு உறவுகளை கடுமையாக பாதித்துள்ளது. ஆற்றல், விவசாயம், ஆட்டோமொபைல் துறை பங்குகள் கடுமையாக வீழ்ந்துள்ளன ஹோண்டா, ஹியூண்டாய், ஃபோக்ஸ்வாகன்ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். கனடா மீதான வரியை உடனடியாக உயர்த்தவில்லை என்று கூறும் டிரம்ப், உயர்த்தும் திட்டம் இருப்பதாக கூறியுள்ளார்.