ஏதெர் ஐபிஓவுக்கு வரவேற்பு..

முன்னணி இ-பைக் தயாரிப்பு நிறுவனமான ஏதெர் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2,981 கோடி ரூபாய் நிதியை பெற அந்த நிறுவனம் ஐபிஓ வாயிலாக பணத்தை திரட்டியது. இந்த நிலையில் தேவைப்பட்ட தொகையைவிட 1.4 மடங்கு அதிக தொகை கிடைத்துள்ளது. நிறுவனங்கள் சார்ந்த முதலீடுகள்தான் அதிகம் இருந்தன. நிறுவனங்கள் சார்ந்த முதலீடுகள் மட்டும் ஆயிரத்து 575 கோடி ரூபாயாக இருந்தது. பிற முதலீடுகள் 1,340 கோடி ரூபாயாக இருந்தது. அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலீட்டாளர்கள் 66 விழுக்காடு மட்டுமே முதலீடு செய்தனர். சில்லறை முதலீட்டாளர்கள் 1.78 மடங்கும், ஏதெர் பணியாளர்கள் 5.4மடங்கும் அதிகம் ஐபிஓ பங்குகளை வாங்கினர். இரட்டை இலக்க சந்தாவுக்கான வாய்ப்புகள் சற்றே குறைந்துள்ளது. புதிய பங்குகளாக 2,626 கோடி ரூபாயும், 355 கோடி ரூபாய் ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்றும் நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டது. 2025 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 1,580 கோடி ரூபாய் வருவாயை அந்த நிறுவனம் ஈட்டியது. ஏதெர் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 12,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்தியின் சூழலுக்கு தகுந்தபடிதான் முதலீடு செய்ய முடியும் என்று கூறும் நிபுணர்கள், ஏதெர் பெற்ற வருவாய் குறிப்பிடத்தகுந்தவை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.