ஏசியன் பெயின்ட்ஸ் காலாண்டு முடிவுகள் என்ன?

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் நிகர லாபத்தில் 45% சரிவை கண்டுள்ளது. நகர்பகுதியில் போதுமான வரவேற்பு இல்லாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது.2024 நிதியாண்டின் கடைசி காலாண்டில், நிகர லாபம் மட்டும் ஆயிரத்து257கோடி ரூபாயாக இருந்தது
பணிகள் சார்ந்த செயல்பாடுகளிலும் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்துக்கு 4%சரிவு காணப்பட்டது. காலாண்டு முடிவுகளை அடுத்து டிவிடண்ட்டாக ஒரு பங்குக்கு 20.55ரூபாய் அளிக்க அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முடிவெடுத்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதியை அந்நிறுவனம் ரெக்கார்ட் தேதியாக அறிவித்துள்ளது. பொதுமக்கள்தான் அதிகம் பெயின்ட்களை வாங்கமுன்வரவில்லை என்று கூறியுள்ள இந்த நிறுவனம், வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு பெயின்ட் அடிப்பதில் 6% வளர்ச்சி இருப்பதாக தெரிவித்தார். ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் வருவாய் 1.5%வரை குறைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் 6%வரை வளர்ச்சியை அந்த நிறுவனம் பெற்றுள்ளது. நிலைமை சீராகும் வரையில் காத்திருக்கும் பனியை ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது.