ஆட்குறைப்பு பற்றி சுந்தர் பிச்சை என்ன சொல்கிறார்?

உலகின் பல நாடுகளிலும் சிறந்த தேடுதளங்களில் கூகுளுக்கு தனி இடம் உள்ளது. இந்த சூழலில்கூகுள் நிறுவனத்தின் மொத்த கட்டமைப்பிலும் சில ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர், அமெரிக்காவில் நிலவும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளாலும், உலகளாவிய பிரச்சனைகளாலும் பல முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெரிய நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பேஸ்புக்,டிவிட்டர், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை ஏற்கனவே துவங்கிவிட்டது. இந்த சூழலில் கூகுள் நிறுவனத்தில் சரியாக பணியாற்றாத ஊழியர்களின் பட்டியல் அண்மையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சரியாக பணியாற்றாத மொத்தம் 2% பணியாளர்களை வேலையை விட்டு தூக்க கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வேலையில் இருந்து பணியாளர்களை நீக்குவது தொடர்பாக சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த சுந்தர்பிச்சை , வருங்காலம் மிகவும் கணிக்க முடியாத அளவில் உள்ளதாக கூறினார், எனவே கூகுள் நிறுவனத்தில் இருந்து 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை நீக்கம் குறித்து எந்த தீர்க்கமான முடிவும் கூற முடியாது என்று கூறிய அவர், 2023-ம் ஆண்டுக்குள் ஆட்குறைப்பு நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.