ஓரளவு மீண்ட இந்திய பங்குச்சந்தைகள்..

திங்கட்கிழமை கடுமையாக விழுந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று ஓரளவு மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஆயிரத்து89 புள்ளிகள் உயர்ந்து 74,227புள்ளிகளாகவும், தேசியபங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி374புள்ளிகள் உயர்ந்து 22,535 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச்சந்தையில் ஆட்டோமொபைல், உலோகம், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட்துறை பங்குகள் 3 நாட்கள் சரிவுக்கு பின்னர் மீண்டெழுந்தன. முதலீட்டாளர்களுக்கு 7லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டது.
Jio Financial, Shriram Finance, Titan Company, Cipla, Bharat Electronicsஉள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. பவர்கிரிட் நிறுவனம் மட்டும் நஷ்டத்தை சந்தித்தது. வீட்டு உபயோக பொருட்கள், FMCG, எண்ணெய்மற்றும் எரிவாயு, பொதுத்துறை நிறுவன பங்குகள், ரியல் எஸ்டேட், டெலிகாம், ஊடகம் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4விழுக்காடு வரை லாபம் கண்டன. இந்த நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த தங்கம் விலை, நேற்று சவரனுக்கு480ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 800 ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 60ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 8225 ரூபாயாகவும், வெள்ளி விலை கிராம் 1 ரூபாய் குறைந்து 102 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்தையும் சேர்க்க வேண்டும்.