கைமாறும் எஸ் வங்கி பங்குகள்..

திவாலான எஸ் பேங்க் நிறுவன பங்குகளை தற்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வகித்து வரும் நிலையில் அந்த பங்குகளை ஜப்பானிய நிறுவனத்துக்கு விற்க பணிகள் நடக்கின்றன. ஜப்பானைச்சேர்ந்த நிதி நிறுவனமான சுமிடோமோ மிட்சூய் பேங்கிங் நிறுவனத்துக்கு எஸ் வங்கியின் 33.71விழுக்காடு பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற திறந்த நிலையிலான சலுகையை ஜப்பானிய நிறுவனம் ஏலத்தில் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. 25 விழுக்காடு அல்லது அதற்கும் மேல் பங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் அளிக்கப்படும்எஸ் வங்கியின் பங்குகளில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் 23.97விழுக்காடு வைத்துள்ளது. எச்டிஎப்சியிடம் 2.75 விழுக்காடு, ஐசிஐசிஐயிடம் 2.39 விழுக்காடும் உள்ளன. ஜப்பானைச் சேர்ந்த எஸ்எம்பிசி நிறுவனம், பெரியளவில் பங்குகளை வாங்குவதன் மூலம் அவர்களுக்கு 26 விழுக்காடு வாக்குரிமை கிடைக்கும். திவாலான எஸ் வங்கியின் பங்குகளை கடந்த 2020-ல் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஈக்விட்டிகளாக மாற்றிய அரசு, பாரத ஸ்டேட் வங்கியின் கீழ் பெரும் பகுதியை வைத்திருந்தது.
இதில் பாரத ஸ்டேட்வங்கி மட்டும் 6ஆயிரத்து 50 கோடி ரூபாயும், மற்ற தனியார் வங்கிகள் 3 ஆயிரத்து 950 கோடி ரூபாயும் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.