10 ரூபாய் டிவிடண்ட் தர ஐசிஐசிஐ திட்டம்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ, தனது பங்குதாரர்களுக்கு 2024 நிதியாண்டில் டிவிடண்ட் ஆக தலா 10 ரூபாய் ஒரு பங்குக்கு தர திட்டமிட்டுள்ளது. இது பற்றி அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு வரும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 ஆம் தேதி நிலவரப்படி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 10,707 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை விட 17 விழுக்காடு அதிகம்.அதாவது கடந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் லாபம் ,122 கோடி ரூபாயாக இருந்தது. 10,331 கோடி ரூபாய் வரை லாபம் வரலாம் என்று கணிக்கப்பட்ட நிலையில் அதைவிடவும் அதிகம் கிடைத்திருக்கிறது. நிகர வட்டி வருவாய் 19,093 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தை விட 8 விழுக்காடு அதிகமாகும். அதாவது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நிகர வட்டி வருவாய் 17,667 கோடி ரூபாயாக இருந்தது. நிகர வட்டி வருவாய் 18,958 கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதை விடவும் அதிகம் காசு கிடைத்திருக்கிறது. ஐசிஐசிஐ வங்கியின் வாராக்கடன் விகிதம் கடந்தாண்டு கடைசி காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 2.81 விழுக்காடாக இருந்தது. இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 2.16 விழுக்காடாக குறைந்திருக்கிறது. நிகர வாராக்கடன் கடந்தாண்டு ஜனவரி-மார்ச் வரை 0.48 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 0.42 விழுக்காடாக குறைந்திருக்கிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி நிலவரப்படி ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 1,107 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இது முன்தினத்தை விடவும் 0.53 விழுக்காடு குறைவாகும்