திவாலான சின்டெக்ஸ் நிறுவனத்தை வாங்க முகேஷ் அம்பானி உட்பட பலர் போட்டி !
பிரபல சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் தயாரிப்பு நிறுவனம், திவால் ஆனதை அடுத்து அதை வாங்க ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி உள்பட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த சின்டெக்ஸ் நிறுவனம், வாட்டர் டேங்க் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் முன்னிலையில் இருந்தது. ஹார்மனி , டீசல் மற்றும் பல பிராண்டுகளில் ஆடை விற்பனை மேற்கொண்டது.
அதற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தவணை முடிந்தும் பணம் கட்டாததால் தங்கள் கடனை திருப்பி கேட்டன. இதனால் சின்டெக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டது. வெல்ஸ்பான் நிறுவனம் 1950 கோடி ரூபாய் தொகையைக் கொடுத்து கடன்களை அடைத்து நிறுவனத்தைக் வாங்க அகமதாபாத் தேசிய கம்பெனிகள் சட்ட ட்ரிப்யூனலில் முறையிட்டது, ஆனால் அது மிகக் குறைந்த தொகை என்று கடன் வழங்கிய மிகப்பெரிய இரண்டு வங்கிகள் மறுத்துவிட்டன.
இதற்கிடையே பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் கர்நாடகா பேங்க் உட்பட ‘இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் மோசடி நடைபெற்று இருக்கிறது’ என்று கூறுகிறது. இதனிடையே நிறுவனத்தை வாங்க முகேஷ் அம்பானி ஆதித்ய பிர்லா போன்ற முன்னணி நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.