அம்பானி மகனுக்கு வந்த சிக்கல்…
இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி திகழ்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திகழ்கிறது.இந்த மிகப்பெரிய நிறுவனத்தை 3 பிரிவுகளை பிரித்து பல்வேறு வணிகத்தை அம்பானியின் வாரிசுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அம்பானியின் இளையமகன் ஆனந்துக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் இயக்குநர் பதவி வழங்க ஒரு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் Institutional Shareholder Services என்ற நிறுவனம் ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க தனது பங்குதாரர்களை கேட்டுக்கொண்டுள்ளது. முகேஷ் அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானி மற்றும் இஷாவை இயக்குநர்கள் குழுவில் சேர்க்க வாக்கெடுப்பு நடந்து வருகிறது. பங்குததாரர்கள் 26 ஆம் தேதி வரை வாக்குகளை செலுத்தலாம். இந்த நிலையில் அனுபவம் இல்லாத ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க ISS நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மற்றொரு பிராக்சி நிறுவனமான கிளாஸ் லெவிஸ் ஆனந்த் அம்பானியை இயக்குநர்கள் குழுவில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் செய்ய இருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத்தின் முதலாளிகளிடம் தற்போது வரை 41%பங்குகள் இருக்கின்றன.
ஆகாஷ் அம்பானி 31 வயதாகும் போது ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் 2014ஆம் ஆண்டு முதல் பணியாற்றி தற்போது தலைமை பதவியில் இருக்கிறார். இதேபோல் 31 வயதாகும் இஷாவும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்சர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இறுக்கிறார். பசுமை ஆற்றல் துறையை விரிவாக்கம் செய்யும் பணியில் ஆனந்த் தீவிரம் காட்டி வருகிறார்.ISS நிறுவன அறிக்கையின்படி ஆனந்த் அம்பானிக்கு போதிய அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது.