பயோகான் பயோலாஜிக்ஸ் – மைலன் பயோசிமிலர் இணைப்பு?
பயோகான் பயோலாஜிக்ஸை, மைலனின் பயோசிமிலருடன் இணைப்பதற்காக மைலனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது பயோகான் நிறுவனம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இணைக்கப்பட்ட நிறுவனம் ஐபிஓ மூலம் 10 மில்லியன் டாலர்களை திரட்ட எண்ணியுள்ளது. பயோகான் மற்றும் மைலான் ஆகியவை தங்கள் பயோசிமிலர் வணிகங்களை இணைத்து ஒரு பெரிய நிறுவனத்தை உருவாக்குவதற்கான மேம்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன,
பயோகான் பயலாஜிக்ஸ் என்பது பயோகானின் துணை நிறுவனமாகும். இதில் தடுப்பூசி கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 4.9 பில்லியன் டாலர் பண மதிப்பீட்டில் 15 சதவீத பங்குகளை சீரம் இன்ஸ்டிடியூட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்திற்கு சமீபத்தில் வழங்கியது.