வா தல!!! வா தல!!!! என் தலைவனுக்கு பதில் சொல்லுங்கடா!!!!!
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதனால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் சிக்கல் நிலவியது. இது குறித்து எதிர்க்கட்சியினர் சரமாரியாக கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, சொந்த கட்சிக்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில் பாதுகாப்புத்துறைக்கு பட்ஜெட்டில் குறைவான தொகையை ஒதுக்கியுள்ளதாகவும் சாடியுள்ளார். மேலும் அதானி குழுமம் குறித்த கேள்விக்கும் சுப்பிரமணியன் சாமி பேட்டி அளித்துள்ளார். அதில் அதானியின் சொத்துகளை பிரதமர் மோடி நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்றும், அவரின் சொத்துகளை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தை ,பணத்தை இழந்தவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கூறி அதிரவைத்துள்ளார். அதானிக்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், காங்கிரஸில் உள்ள பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். கட்சியின் புனிதத்தன்மையை பாதுகாக்க பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள சுப்பிரமணியன் சாமி, தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது போலி பட்ஜெட் என்றார். பட்ஜெட் என்றால் 4 தூண்கள் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், அண்மையில் தாக்கல் செய்ததில் அவ்வாறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வரும் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதம் இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால் கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை 3% மட்டுமே வளர்ந்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பட்ஜெட்டில் சில உத்திகள் கடை பிடிக்க வேண்டும், இந்த அரசின் உத்தி என்னவென்றால் ஒன்றுமே இல்லை என்றும் சுப்பிரமணியன் சாமி காட்டமாக பதில் அளித்துள்ளார்.