கோத்ரேஜ் பங்குகளை வாங்கலாமா? இரண்டாம் காலாண்டு முடிவுகள் என்ன சொல்கிறது?
கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் (GCPL), குறைந்த அளவிலான லாபம் மற்றும் புதிய யுக்திகள் இல்லாத காரணங்களால் இழப்பை சந்தித்து வருகிறது. செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மிகக் குறைந்த அளவு லாபத்தை பெற்றிருக்கிறது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பங்கு சந்தையில் 3.5% நஷ்டத்துடன் முடிவடைந்து இருக்கிறது.
சின்தால் மற்றும் குட் நைட் பிராண்டுகளை கோத்ரேஜ் கம்பெனி தயாரிக்கிறது. ஆண்டுக்காண்டு 8.5% வணிகம் வளர்ந்த போதிலும் அதன் லாபம் குறைந்து கொண்டே வருகிறது. பாமாயில் மற்றும் உயர் ரக கச்சா எண்ணெய் விலைகள் ஒட்டுமொத்தமாக லாப வரம்பில் 616 அடிப்படைப் புள்ளிகள் (BPS) 50% குறைவாகக் காணப்பட்டது. இதில் பெரும்பகுதி மொத்த உள்நாட்டு வரம்புகளை கொண்டது. டொமெஸ்டிக் நிறுவனத்தின் 830 பிபிஎஸ் குறைந்து 48.1 சதவீதமாக உள்ளது.
வரும் நிதியாண்டில் வருவாயில் 3% குறைவு இருப்பினும் விலை உயர்வு, அதிக அளவு அன்னிய செலாவணி மற்றும் செலவுகளை மிச்சப்படுத்தும் முயற்சிகள் ஆகியவை காரணமாக நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் லாபமீட்டல் ஓரளவு நிலை பெறலாம். எனவே தடைகளைத் தாண்டி 2022-24ம் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை கோத்ரேஜ் நிறுவனம் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.