சந்தைகளில் தொடர் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் 6 ஆவது வர்த்தக நாளாக தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உயர்வு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் சாதக சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 187 புள்ளிகள் உயர்ந்து,79ஆயிரத்து 595 புள்ளிகளாகவும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 167 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 2 விழுக்காடுக்கும் மேல் ஏற்றம் கண்டன. பொதுத்துறை, மருந்து நிறுவனங்கள், ஆட்டோமொபைல் துறை பங்குகளும் லாபம் கண்டன. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் வரலாற்றிலேயே இல்லாத வகையில், 9ஆயிரத்து 290 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 320 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் 111 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..