அளவு குறைந்தாலும் லாபம் குறையாதாம்..
வங்கி அல்லாத பிறநிறுவனங்கள் வணிக ரீதியிலான கார்டுகளை வழங்க ரிசர்வ் வங்கி அண்மையில் தடை விதித்தது. இந்நிலையில் இது தொடர்பாக மக்கியூரி கேப்பிட்டல் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வங்கிகள் மற்றும் கிரிடிட் கார்டு நிறுவனங்கள் கார்பரேட் ஸ்பெண்ட் என்ற செலவு அளவை குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மக்கள் செலவு செய்யும் அளவுகள் மட்டுமே பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள மக்யூரி நிறுவனம், கார்டுகள் குறையும்போது குறைவான அளவு லாபம் மட்டுமே பாதிக்கப்படும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது. ஃபின்டெக் எனப்படும் நிதி நுட்ப நிறுவனங்களான என்கேஷ், பேமேட் மற்றும் விசா நிறுவனங்கள் வணிக கார்டுகளாக பயன்படுத்த அண்மையில் ரிசர்வ் வங்கி தடைவிதித்தது. கிரிடிட் கார்டுகள் சந்தைகளில் எச்டிஎப்சி நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் பாரத ஸ்டேட் வங்கி , உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது கார்டுகள் மற்றும் பேமண்ட் சேவைகளுக்கு வணிக கார்டுகளை வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .