சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 14 ஆண்டுகளில் மிக அதிகமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்ய வரி ஏதும் செலுத்தத் தேவை இல்லை. இதனால் பலரும் கறுப்புப்பணத்தை அங்கு பதுக்கி வந்தனர். இது 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் 10,000 கோடி அதிகம். அதாவது, 2020ம் ஆண்டு 20 ஆயிரத்து 700 கோடியாக இருந்த இந்தியர்களின் முதலீடு ஒரே ஆண்டில் 50 விழுக்காடுக்கும் அதிகமாக உயர்ந்து 30 ஆயிரத்து 500 கோடியை எட்டி உள்ளது.
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யும் வெளிநாட்டவர் பட்டியலில், இங்கிலாந்து முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இந்தியா 44வது இடத்தில் உள்ளது. பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவிற்கு கீழ் அப்ரிக்காவும், பிரேசிலும் உள்ளன. அதே சமயம் ரஷ்யா 15வது இடத்திலும், சீனா 24வது இடத்தில் உள்ளன.
1 Comment
2cornell