உஷாரய்யா உஷாரு..

இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பாக IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு, அண்மையில் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் நிறுவன கணினிகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஆணையிட்டுள்ளது. திடீரென ஏன் இப்படி ஒரு அறிக்கை என்று கேள்வி எழுந்த நிலையில், அண்மையில் ஸ்டார் ஹெல்த் அன்ட் அலையிடு காப்பீட்டு நிறுவனத்தின் தரவுகளை சைபர் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி திருடினர். இதேபோல் டாடா ஏஐஜி ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமும் இதில் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த இரு நிறுவனங்களிலும் தனியாக ஒரு தணிக்கை நடத்தவும், தாக்குதலுக்கு ஆளான கணினிகளை தனியாக வைக்கவும் ஆணையிடப்பட்டது. இதன்படியே தாக்குதலுக்கு ஆளான நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் மீட்புப்பணிகளை செய்து வருகின்றன. இந்திய கணினி அவசராக மீட்புக் குழுவினருடன் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணைய தாக்குதல் தொடர்பாக விதிகளின்படி முதலில் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதனை காப்பீட்டு நிறுவனங்கள் செய்துள்ளன. தணிக்கை செய்யும் நிறுவனங்களின் அறிவுறுத்தலின்படி மீட்பு, தரவு திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.