ரிலையன்ஸ் ரீட்டெயிலுடன் ஜியோ ஃபைனான்சியல் சர்வீஸ் டீல்..
ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், 360 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரிலைன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் பங்குகளை வாங்க பங்குதாரர்களிடம் ஒப்புதல்கேட்கப்பட்டுள்ளது. ஜியோ லீசிங் சேவைகள் மூலமாக ஜியோ நிறுவனத்துக்கு தேவையான செல்போன் உபகரணங்கள், ரவுட்டர்கள் வாங்கப்பட இருக்கின்றன ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் வாங்கும் பொருட்களை ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ரிலையன்ஸ் குழுமத்தில் இருந்து பிரிந்து சென்ற ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஏர் ஃபைபர் சேவைகள், லேப்டாப்கள், போன்களை வாடகைக்கு விடும் திட்டமும் இருக்கிறதாம்.
எச்பி, லெனோவோ போல இந்த வாடகைக்கு விடும் சந்தையிலும் ஜியோ நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான வாக்குப்பதிவு வரும் 22 ஆம் தேதி முடிய இருக்கிறது. குறிப்பிட்ட இந்த டீல் வரும் 2025, 26 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.