பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு..

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் , 295புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து796 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 461புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. அதானி நிறுவன பங்குகளான அதானி என்டர்பிரைசர்ஸ் 7.2 விழுக்காடும். மோட்டிலால் ஆஸ்வால் நிறுவன பங்குகள் 10 விழுக்காடும் விலை உயர்ந்தன. பெர்சிஸ்ட்டன்ட் சிஸ்டம்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் 3.5 விழுக்காடு விலை உயர்ந்தன. கோடக் மஹிந்திரா நிறுவன பங்குகள் 6 விழுக்காடு சரிந்தது. ஃபைவ்ஸ்டார் பிசினஸ் ஃபைனான்ஸ் நிறுவன பங்குகள் 1.2விழுக்காடு சரிந்தது. அதுல் மற்றும் கோத்ரேஜ் நிறுவனங்களின் பங்குகளும் சரிந்தன. ஒரு கிராம் தங்கம் 8ஆயிரத்து 775 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. . வெள்ளி விலை 108 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு நிலையான ஜிஎஸ்டி மற்றும் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவையும் நகையின் தொகையுடன் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.