தக..தகக்கும் தங்கம் விலை.. – ரூ.40,000 தொட்ட ஒரு சவரன்..!!
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 உயர்ந்து ரூ.40,440க்கு விற்பனையாகிறது.
தங்கத்தில் முதலீடு:
உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியால், கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலையும், தங்கத்தின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதேசமயம் பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வருகின்றன. இதன் காரணமாக உலகில் உள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி வருவதுடன், தங்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றனர்.
தக..தகக்கும் தங்கம் விலை:
அதன்படி, சென்னையில் இன்று திங்கட்கிழமை (07.03.2022) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.85 உயர்ந்து 5,055 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 680 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 காரட்
ஒரு கிராம் தூயத் தங்கம் ரூ.43,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 காசுகள் உயர்ந்து ரூ.75.20-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 75,200 ரூபாயாக விற்கப்படுகிறது.