100 பேரை வீட்டுக்கு அனுப்பி கூகுள்..
முன்னணி டெக் நிறுவனமான மைக்ரோசாஃப்டை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது கிளோவுடு சேவையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்பியுள்ளது. சேல்ஸ், கன்சல்டிங் , ஆப்ரேஷன்ஸ், பொறியியல் துறை உள்ளிட்ட துறைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பணியாளர்களை கூகுள் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பியுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை செய்வதாக கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். கூகுள் கிளைவுடு நெக்ஸ்ட் திட்டத்தில் பணியாற்றிய பலர் வேலை இழந்துள்ளனர். கூகுள் நிறுவனத்தின் முக்கிய குழுக்களை இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு அனுப்ப கூகுள் அண்மையில் திட்டமிட்டிருந்தது. ஆன்லைன் பாதுகாப்பை உறுதிசெய்யும் டெக் குழுவாக இந்த குழு செயல்பட்டது. டெவலப்பர் கட்டமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள அசிம் ஹூசைன், தனது பணியாளர்களுக்கு இது பற்றி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டதால் இந்த ஆட்குறைப்பு நடப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அமேசான் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்கள் கிளவுடு சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் கூகுள் நிறுவனத்தால் அந்த போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பதே நிஜம்